வேலூர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.80 ஆக அதிகரிப்பு
- சில நாட்களுக்கு முன்பு ரூ.25 வரை விற்கப்பட்டது
- 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி செல்கின்றனர்
வேலூர்:
சமையலில் முக்கிய இடம்பிடிப்பது தக்காளி ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை கார ணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் அதன் விலை குறையாமல் ஏறுமுகமாகவே உள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனால் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய இல்லத்தரசிகள் தற்போது 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள். சமையலில் தக்காளியின் பயன்பாட்டையும் பெருமளவு குறைத்து விட்டனர்.
எகிறி வரும் தக்காளியின் விலையால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.