வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரதம்
- 4 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இன்று நடந்தது.
மாவட்ட தலைவர்கள் வேலூர் அருணகிரிநாதன், திருவண்ணாமலை பாபு, ராணிப்பேட்டை பாஸ்கர், திருப்பத்தூர் விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் கோபி கண்ணன் சங்கரன் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மாரிமுத்து உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் ஆணையை வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவித்த நாளில் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊர் புற நூலகங்கள் மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.