உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை கோவிலில் நாளை விடிய விடிய பக்தர்களுக்கு அனுமதி

Published On 2023-02-17 10:36 GMT   |   Update On 2023-02-17 10:36 GMT
  • மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

வேலூர்:

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இதனை தொடர்ந்து தங்கத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை 6 கால பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி யொட்டி நாளை மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுகின்றனர்.

கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் பக்தி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோட்டை வளாகத்தில் மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Tags:    

Similar News