உள்ளூர் செய்திகள்
4500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
- போலீசார் சாராய வேட்டை
- கும்பலை தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள மலைப்பகுதிகளான அல்லேரி, மாமரத்து கொல்லை, ஆகிய பகுதிகளில் சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப்பகுதியின் நடுவில் பேரலில் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை மற்றும் அடுப்பு பேரல்கள் ஆகியவற்றை கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சாராய கும்பலை தேடி வருகின்றனர்.