உள்ளூர் செய்திகள்

குப்பை சேகரிப்பது குறித்து கமிஷனர் வீடு வீடாக ஆய்வு

Published On 2023-04-21 15:23 IST   |   Update On 2023-04-21 15:23:00 IST
  • பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தருகிறார்களா என சோதனை
  • பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தருகிறார்களா என சோதனை மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்து தார் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை காட்பாடி 1+வது மண்டலத்திற்கு உட்பட்ட 3-வது வார்டில் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் முறையாக குப்பைகளை சேகரிக்கிறார்களா, பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருகிறார்களா என ஆய்வு செய்தார்.

மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களிடம் இனி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் கணேஷ், 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News