உள்ளூர் செய்திகள்

மரம் அறுக்கும் எந்திரம் காலில் பட்டு துண்டித்ததால் தச்சு தொழிலாளி பலி

Published On 2022-09-21 14:54 IST   |   Update On 2022-09-21 14:54:00 IST
  • ரத்த போக்கு ஏற்பட்டு பரிதாபம்
  • ரத்த போக்கு ஏற்பட்டு பரிதாபம் போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சி காந்தி கணவாய் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 68). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா (63). வரதராஜன் வீட்டிலேயே சிறு சிறு தச்சு வேலைகளை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் வீட்டில் கட்டில் செய்வதற்காக சிறிய மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரம் வரதராஜன் வலது காலில் பட்டு காலை துண்டித்துள்ளது.

இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய வரதராஜனை காப்பாற்ற வந்த அவரது மனைவி முனியம்மாளுக்கும் காலில் பட்டு வலது காலில் பலத்த காயமடைந்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

அதற்குள் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வரதராஜன் பரிதாபமாக இறந்தார்.

முனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் இன்ஸ் பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News