- வாலிபர் கைது
- 3 பேரை தேடி வருகின்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யுவராணி(வயது 39). இவர், சேம்பள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, ஜங்காலப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) தன் நண்பர்கள் 3 பேருடன், யுவராணி பணிபுரியும் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது யுவராணியை தாக்கிய நிறுவனத்தை சேர்ந்த திலகவதி என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து, அவரையும் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த வழியாக சென்ற மின்வாரிய ஊழியர் பாபு தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரையும் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, இதுகுறித்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்த தாலுகா போலீசார், பெண் களையும் அரசு ஊழியரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில், ஸ்ரீகாந்தை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.