உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் உதவி கலெக்டர் கவிதா மனுக்களை பெற்றார்.உடன் தாசில்தார் வேண்டா, திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி. 

வருடாந்திர ஜமாபந்தி

Published On 2023-05-27 08:30 GMT   |   Update On 2023-05-27 08:30 GMT
  • அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
  • மனு அளிக்க குவிந்த மக்கள்

அணைக்கட்டு:

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைப்பெற்று வருகிறது.

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலும், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அணைக்கட்டு பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலாவதாக அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, அகரம், ஒடுகத்தூர் ஆகிய 5 உட்கோட்டத்திற்க்கு தனிதனியாக நடைப்பெற்று வருகின்றது.

3-வது நாளான நேற்று பள்ளிகொண்டா உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட மக்கள் தங்களின் குறைகளை மனு அளித்தனர்.

இதில் நேற்று மட்டும் 115 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை அளிக்கும் பெரும்பாலான மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை அளித்து வருகின்றனர்.

ஜமாபந்தி கூட்டத்தில் அளிக்கப்படும் மணுக்களின் மீது நிச்சயம் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் அணைக்கட்டு தாலுகா அலுவலகங்களில் குவிந்த வணணம் உள்ளனர்.

Tags:    

Similar News