உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு
- தீயணைப்பு துறை வீரர்கள் போராடி பாம்பை பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர். இவரது வீட்டில் 4-அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது.
இதை கண்ட பாபு அவரது குடும்பத்தினரும் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர்.
பேரணாம்பட்டு தீயணைப்பு நிலைய இயக்குனர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்கள் பாபுவின் வீட்டிலிருந்த சாரை பாம்பை பிடித்து பேரணம்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.