உள்ளூர் செய்திகள்

பெங்களுரில் இருந்து சென்னைக்கு கிரானைட் ஏற்றி சென்ற லாரி விபத்தில் நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

தலை குப்புற கவிழ்ந்து நொறுங்கிய கிரானைட் லாரி

Published On 2022-08-10 08:51 GMT   |   Update On 2022-08-10 08:51 GMT
லாரி டயர் வெடித்து விபரீதம்

போக்குவரத்து பாதிப்பு

வேலூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிரானைட் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வந்தது.

வேலூரில் அருகே உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளை நொறுக்கியபடி தறிகெட்டு ஓடி தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் லாரி முழுவதும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த டிரைவர், கிளீனரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் நொறுங்கிய லாரியை அங்கிருந்து அப்புறபடுத்தினர்.

இன்று காலையில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News