விபத்தில் நொறுங்கிய கார்.
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் காயம்
- திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
கிருஷ்ணகிரி, சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர் தனது நண்பர்களான கிருஷ்ணன், ஹரிஷ், சிலம்பரசன் ஆகியோருடன் காரில் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் காரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பெட்ரோல் பங்க் எதிரே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சர்வீஸ் சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி பின்புறம் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகொண்டா போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.