உள்ளூர் செய்திகள்

3 மாதங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

Published On 2022-09-02 15:23 IST   |   Update On 2022-09-02 15:23:00 IST
  • சுகாதாரத் துறையினர் கடும் எச்சரிக்கை
  • வேலூரில் அறிகுறியால் பணிகள் தீவிரம்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நல்ல நீரில் வளரக்கூடிய ஏடீஸ் கொசு அதிகரித்துள்ளது.டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

ஜனவரி மாதம் முதல் நேற்று வரை வேலூர் மாவட்டத்தில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 7 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது. நேற்று காகித பட்டறையில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டது.தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் செய்யப்பட்டன. மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

ஒரு வார்டுக்கு 5 கொசு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி முழுவதும் மொத்தம் 375 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது‌. இதனால் பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News