உள்ளூர் செய்திகள்

கைதானவரையும் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவையும் படத்தில் காணலாம்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2022-10-21 09:59 GMT   |   Update On 2022-10-21 09:59 GMT
  • வாசனை பவுடர் கொட்டி கடத்தல்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு பள்ளி கொண்டா வழியாக போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணா கரன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் ஆகியோர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது பெங்களூ ரில் இருந்து தினந்தோறும் செல்லும் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது.

போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை யிட்டனர், இதில் வாகனம் முழுவதும் முகத்திற்க்கு பயன்ப டுத்த்கப்படும் பாண்ஸ் பவுடர் கொட்டி இருந்ததும், அதில் பெரிய பெரிய பெட்டிகளில், மூட்கடைளில் பார்சல்கள் இருந்தன.

இதனையடுத்து போலீசார் சந்தேகதின் அடிப்படையில் பார்சல்க ளை பிரித்து பார்க்கும் போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்ப ட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் இருந்தனர்.

வாகனத்துடன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது50) என்பவரை கைது செய்தனர். பள்ளி கொண்டா சுங்கச்சா வடியில் போலீசார் போதைப்பொ ருள்களின் வாசனை வைத்து தான் பிடிக்கின்றனர்.

அதனால் முகத்திற்க்கு பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளான பவுடரை லாரி முழுவதும் தெளித்து வந்தால் வாசனை வராது இதனால் போலீசார் எங்களை பிடிக்க முடியாது என கூறியுள்ளார்.

Tags:    

Similar News