உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2022-12-25 16:55 IST   |   Update On 2022-12-25 16:55:00 IST
  • காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
  • தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் தனலட்சுமி நகர் அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் பாஸ்கரன் (வயது 52). இவரது மனைவி தனலட்சுமி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காஞ்சிபுரம் பெருநகர் சாலையில் இரவு 10½ மணி அளவில் அவர்கள் தங்கி இருக்கும் தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். பாஸ்கரனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News