உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது- காய்கறி விலை அதிகரிப்பு

Published On 2023-03-12 09:27 GMT   |   Update On 2023-03-12 09:27 GMT
  • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பச்சை காய்கறிகள் வரத்து சந்தைக்கு வருவது குறைந்து உள்ளது.
  • கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

இன்று 46 லாரிகளில் தக்காளி, 45 லாரிகளில் வெங்காயம் உட்பட மொத்தம் 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பச்சை காய்கறிகள் வரத்து சந்தைக்கு வருவது குறைந்து உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய பச்சை காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.70 வரை விற்பனை ஆனது. தக்காளி ரூ.20-க்கும், வெங்காயம் கிலோ ரூ.10-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.15-க்கு, விற்கப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News