உள்ளூர் செய்திகள்

திருவிழாவில் கரகம் எடுத்துச் சென்ற பக்தர்கள்.

வாழப்பாடி வடபத்திர காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-03-07 15:32 IST   |   Update On 2023-03-07 15:32:00 IST
  • வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது.
  • மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி காளியம்மன் நகர் பாப்பான் ஏரிக்கரையில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு, மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் முனியப்பன் சுவாமிகள் விருந்துக்கு அழைத்தல் நிகழ்ச்சியும், மறுநாள் காலை சாமி குடியழைத்தல், அரண்மனை கிடா பலியிடுதல் மற்றும் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று பக்தர்கள் கரகம் எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் அங்கபிரசங்கம் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும், சுவாமிக்கு எருமைக்கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புஷ்ப அலங்காரத்தில் மூலவரான வடபத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற தெருக்கூத்து

நாடகத்தை நுாற்றுக்கணக்கா னோர், இரவு முழுக்க கண்விழித்திருந்து கண்டுகளித்தனர். நிறைவாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி அலங்காரம், வாண

வேடிக்கை, உற்ச மூர்த்தி

திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா அய்யாகவுண்டர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News