சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு.
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு
- ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி.
- ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்தர்காடு கிராம ஊராட்சியில் கிளிண்டன் கார்டனில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் 2022-23 கீழ் ரூ.8.27 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கணபதி நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரம் செலவில் நீர் உரிஞ்சும் குழி அமைக்கும் பணி, சோழியத் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.08 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்பட பணிகளை ஆய்வு செய்து சித்தர்காடு முதன்மைச் சாலையில் உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியையும் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்மஞ்சுளா (கி.ஊ), உதவி பொறியாளர் பூங்குழலி, உதவி செயற்பொறியாளர் பொறுப்பு ராஜேஷ் கண்ணன், மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பரமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் வேலு-ரெத்தினவேல் வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, ஊராட்சி செயலர் வெங்கடேசன், துணைத் தலைவர் ரமணி தனபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.