தருமபுரியில் நாளை நடக்கிறது: கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி
- 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
- திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வர மகாலட்சுமிக்கு நாளை (25-ந்தேதி) வெள்ளி க்கிழமையன்று வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
இதற்காக நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டு புண்யா ஹவாசனம் நடை பெறுகிறது. இதை த்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அம்மனுக்கு 8 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதனையடுத்து 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.