உள்ளூர் செய்திகள்

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வுப்பணிகள் நடைபெற்றது.


துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்- பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வேண்டுகோள்

Published On 2023-02-17 08:55 GMT   |   Update On 2023-02-17 08:55 GMT
  • நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தார்.
  • பொது கழிப்பிடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார். பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினை புனரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும் உடன்குடிபேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலைய வணிக வளாகங்களில் நெகிழிப்பை உபயோகம் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் நெகிழிபை தடுப்பு மற்றும் துணிப்பை பயன்பாடுகளை அதிகரிக்க செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

பின்னர் திடக்கழிவு மேலாண்மை திடலில் குப்பைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். தேவையான பராமரிப்பு மற்றும் நவீன மயமாக்குதல் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது பேரூராட்சி செயலாளர் பாபு, தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி மற்றும் ஊழியர்கள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News