உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அக்னீஸ்வரர்.

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய திருவிழா

Published On 2023-05-15 15:31 IST   |   Update On 2023-05-15 15:31:00 IST
  • விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும் நடைபெற்றது.
  • 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் அக்னீசுவரசாமி கோவில் உள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார்.

ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் முனைவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகா னந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இதை த்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News