உள்ளூர் செய்திகள்

பாளை வ.உ.சி. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

சென்னையில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது-ஆசிய ஆக்கி போட்டிக்கான கோப்பை நெல்லை வந்தது

Published On 2023-07-22 08:45 GMT   |   Update On 2023-07-22 08:45 GMT
  • ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
  • இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

நெல்லை:

ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

இந்தியா 3 முறை பட்டம்

ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நெல்லை வந்தது

தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.

Tags:    

Similar News