உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் வெளியேறிதேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

Published On 2023-02-09 09:48 GMT   |   Update On 2023-02-09 09:48 GMT
  • வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
  • சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டியில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.

பாதள சாக்கடை

இந்த குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளிேயறுவதற்கு வசதியாக 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கட்டி முடிக்கப்பட்டது.

அவற்றை சரியாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாக சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேட்டைக்காரன்புதூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ -மாணவிகள் மூக்கை அடைத்துக் கொண்டு கழிவுநீரை மிதித்துச் செல்வதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வெளியேறி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவு நீரில் விழும் அபாயமும்

ஏற்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News