உள்ளூர் செய்திகள்

தருமபுாி நகராட்சிக்குட்பட்ட வாணிய கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களில் புகுந்த மழைநீா்

Published On 2022-12-13 10:16 GMT   |   Update On 2022-12-13 10:16 GMT
  • 15 அடி அகலம் கொண்ட கால்வாய் முட்புதா்கள் மற்றும் தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி,

தருமபுாி நகராட்சி 26-வது வாா்டுக்குட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அன்னசாகரத்திலிருந்து சனத்குமாா் நதிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் சுமாா் 15 அடி அகலம் கொண்ட கால்வாய் காலப்போக்கில் முட்புதா்கள் மற்றும் தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த மழை மற்றும் தற்போது மாண்டஸ் புயலின் காரணமாக தருமபுாி மாவட்டத்தில் மழை பெய்ததால் வேடியப்பன் திட்டு பகுதியில் உள்ள வாணிய கால்வாய் அடைப்பின் காரணமாக கால்வாய் அருகே உள்ள வயல்களில் மழைநீரானது தேங்கி வருகிறது.

விவசாயிகள் நெல் நடவு செய்து அறுவடை செய்யும் நேரத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பின் காரணமாக நெல்கள் மழைநீாில் மூழ்கியுள்ளதால் நெல் அழுகும் நிலையில் உள்ளதாகவும் அதேபோல் வீடுகள் உள்ள பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் வீட்டிற்கு சென்று வருவதற்கு கூட அவதிப்படுவதாகவும் தொிவிக்கின்றனா்.

எனவே உடனடியாக நகராட்சி நிா்வாகம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா் வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News