உள்ளூர் செய்திகள்
உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகர குரு தேர்வு
- ஜான் சாமுவேல் தென்னிந்திய திருச்சபையில் சூழலியல் துறைக்கான கவுரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளார்.
- ஜான் சாமுவேலை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடன்குடி:
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சுற்றுச்சூழல் கரிசனத்துறை இயக்குநராகவும், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகரகுருவாகவும் பணியாற்றி வருபவர் ஜான் சாமுவேல்.சிறந்த வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் தென்னிந்திய திருச் சபையில் சூழலியல் துறைக்கான கவுரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளார்.
அதற்கான இணை நகலை தூத்துக்குடிநாசரேத் திருமண்டல பேராயர் தீமோத்தேயு ரவீந்திரன், திருமண்டல நிர்வாகக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்டக், செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், மேலாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. ஜான் சாமுவேலை நெல்லை கிறிஸ்தவ வரலாற்று சங்க நிர்வாகிகள், உடன்குடி சுற்று வட்டார சபை மக்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.