உள்ளூர் செய்திகள்

மணிமண்டப பூங்காவில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

தஞ்சை மணிமண்டப பூங்காவில் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் - கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2022-07-13 10:50 GMT   |   Update On 2022-07-13 10:50 GMT
  • பூங்காவுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.
  • சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவற்றை கேட்டு அறிந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு மணிமண்டப பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் அனைத்து வித மான விளையாட்டுபொரு ட்களும் உள்ளன. இதனால் மணிமண்டபம் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் பூங்கா வுக்கு வருபவர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பூங்காவின் அருகே தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுக்களால் இந்த வாகன நிறுத்தம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுய உதவி குழுக்களிடம் வாகனம் நிறுத்துவதற்கான கட்டண விவரம் உள்ளிட்ட பலவ ற்றை கேட்டு அறிந்தார்.

இந்த பார்க்கிங்கில் இருச க்கர வாகனம் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. கட்டணமாக ரூ.5 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார்மணிக ண்டன், ஊரக வாழ்வா தார இயக்க திட்ட இயக்கு னர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள்சிவா, சரவணன் சீனிவாசன், சுவாமிநாதன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News