உள்ளூர் செய்திகள்

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

Published On 2023-08-23 15:59 IST   |   Update On 2023-08-23 15:59:00 IST
  • அவரை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து, எதற்காக இந்த பகுதியில் வண்டியில் வேகமாக செல்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.
  • மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாவை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டபள்ளி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் குணா (வயது23). ஜே.சி.பி. ஆப்ரேட்டரான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து, எதற்காக இந்த பகுதியில் வண்டியில் வேகமாக செல்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணாவை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து குணா சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் மிட்டபள்ளியைச் சேர்ந்த கேப்டன் தாஸ் (22), திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூரைச் சேர்ந்த முருகேசன் (33) ஆகிய 2 பேர் குணாவை கத்தியால் குத்தியது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News