உள்ளூர் செய்திகள்

பல்லடம் கோவில்களில் கார்த்திகை வழிபாடு

Published On 2022-12-08 10:53 IST   |   Update On 2022-12-08 10:53:00 IST
  • ஒரே கல்லினால் ஆன 50 அடி உயர தீபக் கம்பம் வைக்கப்பட்டுள்ளது.
  • தீபக் கம்பத்தில் திருக்கார்த்திகையையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

பல்லடம் : 

பல்லடம் அருகே அலகுமலையில் புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன 50 அடி உயர தீபக் கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தீபக் கம்பத்தில் திருக்கார்த்திகையையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் சாமிக்கு பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அது போல் பல்லடம் தண்டபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில் அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மற்றும் கொடுவாய், பெருந்தொழுவு, புத்தரச்சல், கண்டியன்கோவில், பொங்கலூர் பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் திருக்கார்த்திகையையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News