உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

Published On 2023-11-09 08:59 GMT   |   Update On 2023-11-09 08:59 GMT
  • ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
  • உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லை:

காலாண்டு வரி உயர்வுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். உடனடியாக மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேள னம் அறிவித்தது.

அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தை ஒட்டி நெல்லையில் வெளியூர்க ளில் இருந்து வந்த சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளை, வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள காலாண்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்று கூறி அவர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News