உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே தீவனம் தயாரிக்க கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு

Published On 2023-06-01 08:21 GMT   |   Update On 2023-06-01 08:21 GMT
  • பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது.
  • 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த மாபுஸ்கான் பேட்டையில் கோழி தீவனம் தயார் செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்காக கோழி கழிவுகள்,மீன், இறால் கழிவுகள் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம்கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இதனை பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள ஞாயிறு, மாபுஸ்கான் பேட்டை, பசுவன் பாளையம், வழுதிகைமேடு, பூதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தீவனம் தயாரிக்க 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை மாபுஸ்கான் பேட்டை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Tags:    

Similar News