உள்ளூர் செய்திகள்

மன உளைச்சலில் வகுப்பறையில் சுருண்டுவிழுந்து ஆசிரியை சாவு

Published On 2023-09-22 12:56 IST   |   Update On 2023-09-22 12:56:00 IST
  • இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
  • நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

டால்மியாபுரம், 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெயமேரி (வயது 52).

இவர் புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபு ரிந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் எமிஸ் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

இப்பகுதியில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எமிஸ் டெஸ்ட் நடத்த இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், அன்னாள் ஜெயமேரி நேற்று மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்ததால் அருகில் உள்ள ஆசிரியரிடம் இது குறித்து கேட்டு க்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை செய்து புள்ளம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ெஜயமேரி இறந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபோன்று புள்ளம்பாடி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் நடத்த முடியாமல் பல்வேறு ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News