உள்ளூர் செய்திகள்
- இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
திருச்சி
திருச்சி கருமண்டபம் விசுவாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 56). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார் இந்த நிலையில் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 1/4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது . இது தொடர்பாக மணி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்