உள்ளூர் செய்திகள்
- முசிறியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொணடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முசிறி,
முசிறி கைகாட்டியில் மருத்துவமனை கட்டிட பணியை ஆய்வு செய்ய கோரி தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சுரேஷ், தொகுதி தலைவர் பழனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் லிங்கம் , மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில துணை பொருளாளர் ரேணு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட பொறுப்பாளர் சேருகுடி சங்கர், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முசிறி ஒன்றிய தலைவர் ஜெயபால் உட்பட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொணடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.