உள்ளூர் செய்திகள்
உருமுநாதர் கோவிலில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருடிய முதியவர்
- அரியமங்கலத்தில்கோவிலில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருடிய முதியவர்
- திருடப்பட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்
திருச்சி
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் உள்ளது. இரவு அர்ச்சகர் மணிகண்டன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்ம ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் இருந்த பித்தளை அகல் விளக்கு மற்றும் பித்தளை மணியை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அர்ச்சகர் மணிகண்டன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி லால்குடி அருகே உள்ள பரமசிவபுரத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 72)என்ற முதியவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட பூஜை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.