- திருச்சி கூட்டுறவுத்துறை சார்பில்விழிப்புணர்வு கருத்தரங்கம்
- சட்டம்-2005 விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி,
திருச்சி கூட்டுறவுத்துறை சார்பில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலமாக நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு திருச்சி சரக துணை பதிவாளர் சாய் நந்தினி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கென்னடி மாணவ மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர், பணியாளர் அலுவலர் முத்தமிழ் செல்வி, திருச்சி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அதிகாரி பேபி ராணி, மண்டல துணைப் பதிவாளர் வீட்டு வசதி நாராயணமூர்த்தி, துணைப் பதிவாளர் பயிற்சி காவியா நல்ல மணி, திருச்சி கூட்டுறவு ஒன்றியத்தின் செயல் ஆட்சியர் ஹபிபுல்லா மற்றும் கூட்டுறவு மேலாண்மை பற்றிய பேச்சு நிலையத்தின் முதல்வர் கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர்