உள்ளூர் செய்திகள்

12 ஆயிரம் பேர் பங்கேற்ற பரதநாட்டிய ஆடி சாதனை

Published On 2023-05-10 08:04 GMT   |   Update On 2023-05-10 08:04 GMT
  • திருச்சியில் பாரத மண்ணே நீ வாழ்க பாடலுக்கு நடனம் ஆடினர்
  • ஆன்லைனிலும் இணைந்த பரத கலைஞர்கள்

திருச்சி,

இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் 6 நிமிடங்கள் 6 வினாடிகள் பாரத மண்ணே நீ வாழ்க என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்சியில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் 12,345 மாணவர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.இந்த சாதனை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவை ஆல் இந்தியா என்டர்டைன்மென்ட் பவுண்டேஷன் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏ.ஐ.எப். பைன் ஆர்ட்ஸ் குழுக்கள், 555 டான்ஸ் அகாடமிகள் இணைந்து நடத்தின.மேற்கண்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகள் திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை, தருமபுரி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ஈரோடு, தூத்துக்குடி, ஓசூர் பல்வேறு மாவட்டங்களிலும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா , மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடந்த நேரலை நிகழ்ச்சிகளை ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இயக்குனர் டிராகன் ஜெட்லி உலக சாதனையாக பதிவு செய்தார்.

Tags:    

Similar News