உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் குத்திக்கொலை

Update: 2022-06-30 09:57 GMT
  • திருச்சியில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
  • கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

திருச்சி:

திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற சக்திகுமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 1 வயதில் மகன் உள்ளார். எனவே சக்திகுமார் தனது மகனுடன் வசித்து வந்தார்.

திருவெறும்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் கக்கன் காலனி பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணை இரவில் சந்திப்பதற்காக அடிக்கடி முத்துப்பாண்டி காந்திநகர் பகுதிக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதை பார்த்த சக்திகுமார் அந்த பெண்ணிடம் சென்று உங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை உங்களின் உறவினர்களிடம் சொல்லிவிடுவேன்.

சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி அந்த பெண் தனது கள்ளக்காதலன் முத்துப்பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலையில் முத்துப்பாண்டி கக்கன் காலனிக்கு அந்த பெண்ணை சந்திப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது அதிக மது போதையில் இருந்த சக்திகுமார், முத்துப்பாண்டியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடை்ந்த முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த சக்திகுமார் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய டிரைவர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் திருவெறும்பூர் பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

Tags:    

Similar News