உள்ளூர் செய்திகள்
கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
- திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்
- வழக்கு பதிந்து கே.கே.நகர் போலீசார தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி காஜாமலை முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 32). தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி பாத்திமா (23). இந்த தம்பதி யருக்கு 5 மாதத்தில் ஆசாக் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வழக்க ம்போல் வேலைக்கு சென்று விட்டு ரிஸ்வான் வீடு திரும்பிய போது அவரது மனைவி மற்றும் குழந்தை யை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கேகே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.