உள்ளூர் செய்திகள்
திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது
- திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்து ஏர்போர்ட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
- 1,250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28) இவரது மனைவி புவனேஸ்வரி ( 25) இருவரும் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மணிகண்டன், புவனேஸ்வரி ஆகிய 2 பேரையும் பிடிக்க முயன்ற போது மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.பிறகு போலீசார் புவனேஸ்வரியை கைது செய்து அவர்களிடமிருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.