உள்ளூர் செய்திகள்
வேன் கவிழ்ந்து விபத்து; 3 பேர் படுகாயம்
- வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்
- டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
மணப்பாறை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த அரபாத்(வயது36), அசார்(26), முத்துக்குமார்(26), இப்ராஹிம்(25) உள்ளிட்ட 6 பேர் பந்தல் பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சோழமாதேவியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். முத்தபுடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அரபாத், அசார், முத்துக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.