உள்ளூர் செய்திகள்

ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் சாவு

Published On 2023-08-29 13:42 IST   |   Update On 2023-08-29 13:53:00 IST
  • திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
  • தகவல் தர ரெயில்வே போலீசார் அறிவிப்பு

திருச்சி, 

திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே காஜாபேட்டை பகுதிடியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்கைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபர் மஞ்சள் நிற சட்டையும், சிமெண்ட் கலர் கையிலியும் அணிந்துள்ளார். அவர் வலது கையில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற சீட்டு, பிங்க் கலரில் உள்ளது. இடது கை நெருப்பில் பட்டு சற்று எரிந்த நிலையில் சுருங்கியுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் 9498139826, 9498101978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News