- திருச்சி அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார்
- உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாளூர் கிராமத்தில் உள்ள முந்திரி காடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பள்ளம் ஒன்று தோண்டி, மூடப்பட்ட தற்கான அடையாளம் காணப்பட்டது. அங்கு ஏதேனும் பிணம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள், இது குறித்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், குழி தோண்டி மூடப்பட்டி ருப்பதற்கான அடையாளம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பொதுமக்கள் சந்தேகம் சரியென உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து துறையூர் தாசில்தார் வனஜா முன்னிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவில், கூலி தொழிலாளிகள் வரவழைத்து மூடப்பட்டி ருந்த குழியில் உள்ள மண் அகற்றப்பட்டது.
அப்போது, அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் புைதக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோத னைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார், துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்க ளில் காணாமல் போன வர்கள் பற்றிய விவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இறந்த வாலிபர் அங்கேயே கொலை செய்யப்பட்டு புதைக்க ப்பட்டாரா? அல்லது வேறு எங்கேயும் கொலை செய்யப்பட்டு, இங்கு வந்து உடல் புதைக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பச்சைமலை பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.