உள்ளூர் செய்திகள்

மாணவர் பேரவை தேர்தல்

Published On 2023-08-06 12:45 IST   |   Update On 2023-08-06 12:45:00 IST
  • மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது
  • பொது தேர்தல் போல வாக்குபதிவு, விரல் மையுடன் நடைபெற்றது

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் 34 ஆசிரியர்களும் 383 மாணவர்கள், 385 மாணவிகள் என மொத்தம் 768 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அவ்வப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சமூக நலன் சார்ந்த பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரியாக ஆசிரியர்களே செயல்பட்டனர். இதில் 4 மாணவர்கள் 13 மாணவிகள் வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தப் பட்டனர். பின்னர் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.வேட்பாளராக களம் கண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளை சந்தித்து தான் வெற்றி பெற்றால் பள்ளிக்கு ஆற்ற உள்ள பணிகள் குறித்து விளக்கிக் கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதே போல் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்ட ஆசிரியர்கள் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பூத் சிலிப் போன்று ஒரு சீட்டு கொடுத்து அதில் அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு ஆகியவற்றையும் குறித்து கொடுத்தனர்.இது மட்டுமின்றி பள்ளியில் இரண்டு வகுப்பறையில் மாதிரி வாக்குச்சாவடியும் அமைக்கப் பட்டது. மேலும் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச் சீட்டும் தயார் செய்து வைக்கப் பட்டது.வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்த பின்னர் அந்த மாணவ, மாணவிகள் வாக்குச்சீட்டை இரண்டு வாக்குப்பெட்டிகளில் போட்டு செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் நடை பெற்றது. வாக்களிக்க அனுமதிக்கப் பட்டதோடு அவர்களின் விரலில் மையும் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து முடித்த பின்னர் மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News