- பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40 )மூட்டை தூக்கும் தொழிலாளி இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் லாவண்யா வயது 15 அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 2-வது மகளுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. அந்த மாணவி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறமுள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார்.வீட்டிலிருந்த அந்த மாணவி கண் தெரியாமல் அப்பகுதி சாலைக்கு வந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன தாயார் தங்கையை கவனித்துக் கொள்ளாமல் நீ எங்கே சென்றாய் என லாவண்யாவை கண்டித்தார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து நாகராஜ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.