உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Published On 2023-09-16 08:13 GMT   |   Update On 2023-09-16 08:13 GMT
  • ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
  • சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம் எதிரொலியால் ஆத்திரம்

திருச்சி,

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்அருகில் அவரது உருவப் படத்தை வைத்து மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச் சென்றார். இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்ததாக கூறி, வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் போலீசார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனையடுத்து அவரது உருவப்படத்திற்குவன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, சிவாஜி சண்முகம், அதிமுக டைமண் திருப்பதி, வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்தப் போராட்டக் காரணமாக ஸ்ரீரங்கத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News