உள்ளூர் செய்திகள்

திருச்சி கே.கே.நகரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - 60 கடைகளின் முகப்பு இடிப்பு

Published On 2022-08-13 15:32 IST   |   Update On 2022-08-13 15:32:00 IST
  • திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
  • காஜாமலை காலனி பெரியார் வளைவு முதல் எல்.ஐ.சி.காலனி வரை 60க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்பு, விளம்பர போர்டுகள், தட்டிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

திருச்சி :

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை எடுத்து ஆங்காங்கே மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன. நீண்ட நாட்களாக இந்த பகுதி மக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

இதில் காஜாமலை காலனி பெரியார் வளைவு முதல் எல்.ஐ.சி.காலனி வரை 60க்கும் மேற்பட்ட கடைகளின் முகப்பு, விளம்பர போர்டுகள், தட்டிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த ஆக்ரமிப்பு அகற்றும் பணி மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் தலைவிரிச்சான், இளநிலை பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஏற்கனவே இந்த கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை எடுக்கச் சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் எந்த எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News