உள்ளூர் செய்திகள்

புள்ளம்பாடி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க ேகாரிக்கை

Published On 2022-10-06 09:35 GMT   |   Update On 2022-10-06 09:35 GMT
  • புள்ளம்பாடி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • அடிக்கடி கேட் மூடுவதால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்பு

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது.

புள்ளம்பாடி பகுதியில் இருந்து திருமானூர், தஞ்சாவூர், திருவையாறு போன்ற பகுதிகளுக்கு புள்ளம்பாடி ெரயில்வே கேட் வழியாக செல்லும் நிலை உள்ளது. புள்ளம்பாடியில் பேரூராட்சி அலுவலகம், அரசினர் தொழிற்பெயர்ச்சி மையம், திருச்சி லால்குடி பகுதிக்கு செல்லும் அனைத்து பொதுமக்களும் இந்த ெரயில்வே பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இப்பகுதியில் இருந்து அதிகமான மாணவர்கள் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி ஆகிய பகுதியில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக நோயாளிகள் புள்ளம்பாடி, திருச்சி, லால்குடிக்கு இந்த ெரயில்வே கேட்டை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளும் விவசாயத்திற்காக இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த பகுதியில் அடிக்கடி திருச்சி சென்னை மார்க்கத்தில் ெரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ெரயில்வே கேட் பல மணி நேரம் மூடும் நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு கல்லூரிக்கு மற்றும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பல பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை செல்ல வேண்டிய மருத்துவர்கள் ஊழியர்கள், பல்வேறு தொழிற்சாலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தொழிற்சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆகவே இப்பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்கப்படுமா என்ன பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Tags:    

Similar News