புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
- திருமணமான 20 நாளில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பரிதாபம்
திருச்சி,
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செ ல்வம் (வயது 29 ). கொத்த னார்.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கட ந்த 20 நாட்களுக்கு முன்பு அத்தை மகளான கீர்த்தனா (20) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் இரவு கண வன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் கீர்த்தனா எழுந்து குளிக்க சென்றார். அப்போது பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று மின்விசி றியில் சேலையால் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வயிற்று வலியால் ஏற்ப ட்ட மன உளைச்சலில் தற் கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோத னைக்கு பின்னர் பன்னீர் செல்வத்தின் உடல் உறவி னர்களிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளது.திருமணமான 20 நாளி லேயே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.