உள்ளூர் செய்திகள்

துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு

Published On 2022-12-17 15:35 IST   |   Update On 2022-12-17 15:35:00 IST
  • துவாக்குடியை திறந்தவெளி கழிவறையில்லாத நகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
  • அ.தி.மு.க. கவுன்சிலர் ஆணையரிடம் ெதரிவித்தார்

திருச்சி:

திருச்சி துவாக்குடி நகராட்சியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆணையாளர் கேட்டுள்ளார். இந்த நிலையில் அந்த நகராட்சியின் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் சாருமதி ஆணையாளரிடம் ஒரு ஆட்சேபனை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

துவாக்குடி நகராட்சியில் உள்ள 1 முதல் 21 வரை உள்ள அனைத்து வார்டுகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவிக்க இருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால் எனது வார்டுக்கு உட்பட்ட செடிமலை முருகன் கோவில் தெருவில் பெரும்பாலான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள்.

இங்கு பொது கழிப்பிட வசதி சரியாக இல்லை. இருக்கும் ஒரு பொதுக் கழிப்பிடத்தையும் நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News