உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

Published On 2022-12-06 10:04 GMT   |   Update On 2022-12-06 10:04 GMT
  • துறையூரில் கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்
  • நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர்

திருச்சி:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக கலைத் திருவிழா என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்தல், ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் பிற துறைகளில் ஆர்வத்தினை உண்டாக்குதல் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் வரவேற்றார்.

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமை தாங்கி கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் நியமனத் குழு தலைவர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் துறையூர் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கோலாட்டம், கும்மி, உள்ளிட்டவைகளுக்கு மாணவ, மாணவியர் சிறப்பாக நடனமாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News