உள்ளூர் செய்திகள்

அன்னதானம் சாப்பிட்டவர் கீழே விழுந்து பலி

Published On 2023-09-11 14:10 IST   |   Update On 2023-09-11 14:10:00 IST
  • திருச்சி அருகே வயலூர் முருகன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்டவர் கீழே விழுந்து பலி
  • சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ராம்ஜிநகர்,

திருச்சி ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரியத்தைச் சார்ந்த மாரிமுத்து (70) என்பவர் பிரசித்தி பெற்ற வயலூர் முருகனை தரிசித்து விட்டு மாடியில் உள்ள அன்னதான மண்டபத்தில் உணவு உட்க்கொண்டு கீழே இறங்கும் போது மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துவிட்டார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலூர் கோவிலில் தினமும் 100 நபர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது இந்த அன்னதானம் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் மாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தை பெரும்பாலானோர் முதியோர்கள் மற்றும் கை கால்கள் ஊனமுற்றோர் உணவருந்தி வருவதால் இதனை கீழே உள்ள தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் அவர்களால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கிருபனந்த வாரியார் மண்டபத்தில் நடத்த வேண்டும். அங்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News